ஹோலியிலும் வந்தது அரசியல் சாயம்.. மோடி தண்ணீர் துப்பாக்கி... ராகுல் கலர் பொடி...
லக்னௌ: ஹோலிபண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பெயர்களில், வண்ணப் பொடிகளும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் துப்பாக்கிகளும், பரபரப்பாக விற்பனையாகின்றன.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, வட மாநிலங்களிலும், வட மாநிலத்தவர்கள் வசிக்கும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மார்ச் மாத பவுர்ணமி நாளில், வண்ணங்களின் திருவிழாவாக கருதப்படும், ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த திருவிழாவில், நண்பர்கள், உறவினர்கள், ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை, பீய்ச்சி அடித்தும், பண்டிகையை, விமரிசையாக கொண்டாடுவர்.
ஹோலி பண்டிகைக்கு ஒருமாதம் முன்பாகவே கலர் பொடிகளை தயார் செய்யும் பணி தொடங்கி விடுகிறது. ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து விழா வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என எண்ணும் மகத்துவம் ஓங்கி நிற்பது இவ்விழாவின் சிறப்பாகும்.

ஹோலியில் அரசியல் சாயம்
இந்தாண்டின், ஹோலி பண்டிகை, தற்போது, துவங்கி உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஹோலி பண்டிகையிலும், தேர்தல் சாயம் காணப்படுகிறது.

மோடி- ராகுல் - கெஜ்ரிவால்
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆகியோர் பெயரில் கலர் பொடிகளும், தண்ணீர் பீச்சியடிக்கும் துப்பாக்கிகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

ரூ.50 முதல் ரூ.300 வரை
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் பெயர்களில், வண்ணப் பொடிகளும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் துப்பாக்கிகளும், பரபரப்பாக விற்பனையாகின்றன. அலகாபாத்தில், வண்ணப் பொடிகளும், துப்பாக்கிகளும், 50 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

மோடி கலருக்கு கிராக்கி
'நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்ட, தண்ணீர் துப்பாக்கி, வண்ணப் பொடிகளுக்கு, அதிக கிராக்கி உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு 25 சதவிகித தள்ளுபடி
அதேசமயம் ராகுல் பெயரில் உள்ள துப்பாக்கிகள், வண்ணப் பொடிகளுக்கு, 25 சதவீத தள்ளுபடி கொடுத்து விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications