ஒரு நம்பர் பிளேட்டை ரூ.8.5 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த தொழில் அதிபர் மிட்டல்
சன்டிகர்: பிரபல தொழில் அதிபர் எல்.டி. மிட்டல் 0001 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட்டை ரூ.8.5 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.
சன்டிகரில் சிஹெச்-01-ஏஇசட் சீரியஸ் நம்பர் பிளேட்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இதையடுத்து பதிவு மற்றும் உரிமம் அதிகார அலுவலகத்தில் சிஹெச்-01-ஏஇசட் 0001 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் ஏலத்தில் விடப்பட்டது.
அந்த நம்பர் பிளேட்டை சோனாலிகா குழும தலைவர் எல்.டி. மிட்டல் ரூ.8.5 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார். இந்த நம்பர் பிளேட் சோனாலிகா குழுமத்தின் இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமாக வாங்கியுள்ள புத்தம் புதிய மெர்சிடீஸ் எஸ் சீரிஸ் காரில் பயன்படுத்தப்பட உள்ளது.
ஏலம்
முன்னதாக கடந்த ஆண்டு சிஹெச்-01- ஏடி 0001 என்ற நம்பர் பிளேட் ரூ.9.1 லட்சத்திற்கு ஏலத்தில் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ப்ஸ்
போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த ஆண்டு வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியில் எல்.டி. மிட்டலின் பெயர் இடம் பெற்றிருந்தது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
உலக அளவில்
உலக அளவில் உள்ள பணக்காரர்களில் மிட்டலுக்கு 1,465வது இடம் கிடைத்துள்ளது.
சோனாலிகா குழுமம்
கடந்த 1969ம் ஆண்டு துவங்கப்பட்ட சோனாலிகா குழுமம் இந்தியாவின் பிரதான 3 டிராக்டர் தயாரிப்பாளர்களில் ஒன்று. இந்த குழுமம் விவசாய எந்திர பொருட்கள், டீசல் ஜெனரேட்டர்கள், ஆட்டோ பாகங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கின்றது.
60 நாடுகள்
சோனாலிகா தயாரிப்புகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானின் யான்மர், தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் உள்ளிட்டவை சோனாலிகா குழுமத்தின் இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications