பெங்களூர்வாசிகளின் நிலைமை இப்போ இப்படித் தான் இருக்கு பாஸ்!
பெங்களூர்: பெங்களூரில் மழையும், கடுங்குளிருமாக உள்ளது. அதனால் மக்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரில் கடந்த ஒரு வார காலமாக தினமும் மழை பெய்து வருகிறது. வானம் நாள் முழுவதும் மேகமூட்டமாக உள்ளது. சூரியன் அரிதாக என்றாவது ஒரு நாள் அதுவும் ஒரு சில நிமிடங்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டு ஓடி விடுகிறது.

மழை என்னவோ தூரலாக இருந்தாலும் நாள் முழுவதும் கடும் குளிராக உள்ளது. வீடுகள், அலுவலகங்களில் கதவு, ஜன்னல்களை மூடி வைத்திருக்கும்போதிலும் குளிர் நடுக்குகிறது. மாலை 6 மணிக்கு மேலும் கடுங்குளிராக உள்ளது.
வீட்டில் தரையில் கால் வைக்க முடியாத அளவுக்கு குளிர்கிறது. அதனால் மக்கள் ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து ஒரே இடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். இதில் இந்த வாரம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெங்களூர் மக்களை கவலை அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் பெங்களூர் மக்களின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கும் வகையில் ஒரு புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.












Click it and Unblock the Notifications