யூரி தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: மோடி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் நடந்த தீவிர தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட, 21 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,
யூரியில் நடந்த கோழைத்தனமாக தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை நாட்டு மக்களிடம் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
We strongly condemn the cowardly terror attack in Uri. I assure the nation that those behind this despicable attack will not go unpunished.
— Narendra Modi (@narendramodi) September 18, 2016
தீவிரவாத தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் பேசியுள்ளேன் என்றார்.
யூரி தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணை தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
இது கண்டனத்திற்குரியது. அவர்கள் இது போன்ற தாக்குதல்களால் நம்மை மிரட்டலாம். ஆனால் உள்நாட்டு பாதுகாப்பை பொறுத்த வரை இந்தியா பலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை மீண்டும் கொண்டு வருவதை எந்த மிரட்டலாலும் தடுக்க முடியாது என்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications