பாஜக ஆட்சிக்கு வந்ததால் கோபத்தில் தீவிரவாதிகள்... நரேந்திர மோடிக்கு ஆபத்து?
டெல்லி: பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது தீவிரவாதக் குழுக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இனிமேல் முன்பு போல சுதந்திரமாக செயல்பட முடியாது என்ற அச்சமும் அவர்களிடையே ஏற்பட்டுள்ளதால் அவர்கள் நரேந்திர மோடிக்கு மிகத் தீவிரமாக குறி வைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையிலான சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. வரும் நாட்களில் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான பிடி முன்பை விட கடுமையாக இறுகும் என்பதால் அதைத் தகர்த்து மோடிக்கும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் தீவிரவாதிகள் செயல்பட முனைவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு இது நடக்கலாம் என்பதை உறுதி செய்வதாக உள்ளது.

ஆத்திரத்தில் சிமி
குறிப்பாக இஸ்லாமிய மாணவர் இயக்கம் எனப்படும் சிமி அமைப்பு மோடி பிரதமராவது குறித்து கடும் ஆத்திரத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட அமைப்பாகும். சமீபத்தில் போபால் கோர்ட்டில் சிமி இயக்கத்தினர் போட்ட கோஷம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடியின் நாட்கள் எண்ணப்படும்
போபால் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சிமி இயக்கத்தினர் கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்கள் மோடியின் நாட்கள் எண்ணப்படும். தலிபான் வாழ்க என்று கோஷமிட்டனர்.

டெல்லியில் மோடி கால் வைத்தபோது
சரியாக அந்த சமயத்தில்தான் மாபெரும் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் முதல் முறையாக டெல்லிக்குப் போயிருந்தார் மோடி. அதே நேரத்தில்தான் இந்த 18 சிமி இயக்கத்தினரும் கோர்ட்டில் வைத்து இப்படிக் கோஷம் போட்டனர்.

தலிபான்களுடன் கை கோர்ப்பா
இந்த 18 பேரில் ஒருவர் மத்தியப் பிரதேசத்து சிமி தலைவரும், முக்கியக் குற்றவாளியுமான அபு பைசல் ஆவார். இவர்கள் தலிபானை வாழ்த்திக் கோஷம் போட்டதுதான் காவல்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இனி மோடிதான்
பைசலும் மற்றவர்களும் கோர்ட்டில் கூடியிருந்த போலீஸார், பொதுமக்கள் உள்ளிட்டோரைப் பார்த்து சத்தமாக, இனி மோடிதான், அவருக்கான நேரம் வந்து விட்டது. அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன. தலிபான் வாழ்க என்று கோஷமிட்டபடி சென்றனர்.

மத்திய பிரதேச அரசு உஷார்
கைதிகள் இப்படி கோஷமிட்ட சம்பவம் ம.பி. அரசுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அடுத்து வரும் விசாரணைகளை சிறைக்குள்ளேயே நடத்த ம.பி. அரசு தீர்மானித்துள்ளதாம்.

அடுத்தடுத்துக் கைதாகும் சிமி இயக்கத்தினர்
நாடு முழுவதும் சமீப நாட்களில் ஆங்காங்கு பல சிமி இயக்கத்தினர் கைதாகியுள்ளனர். இவர்களுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் காவல்துறையை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

மோடி கூட்டத்திற்கு முன்பு சிக்கிய சிமி இயக்கத்தினர்
இதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி ராய்பப்பூரில் நடைபெறவிருந்த மோடி கூட்டத்திற்கு முன்னதாக சிமியி்ன் ஸ்லீப்பர் செல்லைச் சேர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மோடி கூட்டம் நடந்த இடத்தை வேுவு பார்த்தபோது சிக்கினர். அவர்களில் முக்கியமான நபர் உமர் சித்திக்கி என்பதாகும். இந்த நபருக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் ஹைதர் அலி அப்துல்லா, நுமன் அன்சாரி, தெளபீக் அன்சாரி, மொஜிபுல்லா ஆகியோருடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

பீகார் குண்டுவெடிப்புகளில் தொடர்பு
இந்தக் கும்பலுக்கு பீகார் மாநிலம் புத்தகயா மற்றும் பாட்னாவில் மோடி கூட்டங்களின்போது நடந்த வெடிகுண்டுச் சம்பவங்களில் தொடர்பு உண்டு. மேலும் அப்போது நடந்த குண்டுவெடிப்புகளில் மோடி தப்பியதால் ராய்ப்பூரில் அவர்கள் குறி வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

கைகோர்த்துச் செயல்படும் சிமி - ஐஎம்
சிமியும், இந்தியன் முஜாஹிதீனும் நீண்ட காலமாகவே கை கோர்த்துச் செயல்படுகின்றனர் என்று போலீஸார் கூறுகிறார்கள். சிமி இயக்கத்தினர் தற்போது மோடியைத் தீவிரமாக குறி வைத்திருப்பதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். போபால் கோர்ட் சம்பவம் அதற்கு முக்கியச் சான்றாக அமைந்துள்ளதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.

எதிரும் புதிரும்...
பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இரண்டுமே தீவிரவாதக் குழுக்களுக்கு எப்போதுமே எதிரிகள்தான். எனவேதான் இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆசி கொண்ட பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதால் தீவிரவாதக் குழுக்கள் இயற்கையாகவே கோபம் அடையும் என்பது எதார்த்தமானதுதான். எனவே முன்பை விட கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு காவல்துறையினர் தள்ளபப்ட்டுள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications