பஞ்சாப்பில் பாக். சிம் கார்டுகள், பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நீடிக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாகிஸ்தான் சிம் கார்டுகள், வெளிநாட்டு ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப்பில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சண்டிகர் அருகே 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிக்கியது.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாகிஸ்தான் சிம்கார்டுகள், சீனா, பாகிஸ்தான் மற்றும் பிரேசில் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் குர்ஜந்த்சிங், சந்தீப் சிங் ஆகிய 2 பேரும் பாகிஸ்தான் எல்லையோர மாவட்டமான தாரன் தாரனைச் சேர்ந்தவர்கள்; மற்றொரு நபரான ஜதீந்தர்சிங் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இவர்கள் வழிப்பறி, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கும் தீவிரவாத கும்பல்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications