சாக்லேட் கொடுத்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 3 காமக்கொடூரன்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் 3 பேர் 6 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள பெட்டகுடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கொத்தனார். அவருக்கு 6 வயதில் மகள் இருந்தார்.

சிறுமி தனது தந்தை வேலை செய்யும் கட்டுமான இடத்திற்கு கடந்த 10ம் தேதி சென்றுள்ளார். சிறுமியை பார்த்த அங்கிருந்த ராமகிருஷ்ணா, நரசிம்மா, மது ஆகியோர் அவருக்கு சாக்லேட் கொடுத்துள்ளனர்.
பின்னர் மூன்று பேரும் சிறுமி என்று கூட பார்க்காமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை சொல்லி தங்களை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சினர்.
இதையடுத்து அவர்கள் சிறுமியை கொலை செய்து கட்டுமான பணி நடந்து வரும் வீட்டின் செல்ஃபில் உடலை வைத்து மணலை போட்டு மூடிவிட்டனர்.
உடல் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து நேற்று துர்நாற்றம் வரவே சிறுமி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியை சீரழித்த மூன்று பேரும் ராமுவுக்கு தெரிந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.