கர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. சரமாரியாக வெட்டி தள்ளிய கும்பல்.. ஆர்எஸ்எஸ் தலைவர் குடும்பமே பலி
ஆர்எஸ்எஸ் பிரமுகரை குடும்பத்துடன் வெட்டி கொலை செய்துள்ளனர்
கொல்கத்தா: கோபால் வீடு முழுக்க ஒரே ரத்தம்.. அவரையும், அவரது மனைவி பியூட்டி, குழந்தையையும் மர்மநபர்கள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜியாகாஞ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால். இவர் ஒரு ஆசிரியர். ஆர்எஸ்எஸ் பிரமுகரும் கூட. இவரது மனைவி பெயர் பியூட்டி. இவர்களுக்கு அங்கன் என்ற 8 வயது மகன் இருக்கிறான். இப்போது பியூட்டி திரும்பவும் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், இவர்கள் 3 பேருமே அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். யார் இவர்களை கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. இதனால் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
எனினும் இந்த சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை எஸ்பி சொல்லும்போது, "ஆசிரியர் போந்து கோபால் வீட்டு பக்கத்தில் விஜயதசமி பூஜைகள் நடந்துள்ளன. ஆனால், இவர் குடும்பத்தில் இருந்து மட்டும் அந்த பூஜைக்கு செல்லவில்ல. அதனால்தான் அங்கிருப்பவர்களுக்கு சந்தேகம் வீட்டுக்கே வந்து என்ன, ஏதென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் கோபால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
தட்டி தட்டி பார்த்தும் திறக்கவில்லை என்பதால், அந்த பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர். போலீசாரும் விரைந்து வீட்டின் கதவை உடைத்து கொண்டு பார்த்தபோது, கோபால், மனைவி பியூட்டி, மகன் என 3 பேருமே கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று தெரியவில்லை. வீடு முழுக்க ரத்தமாக இருந்தது. இதை பற்றி விசாரித்து வருகிறோம்" என்றார். இப்படி ஒரு குடும்பத்தையே கொடூரமாக மர்மநபர்கள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை தந்துள்ளது.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications