திரிபுரா.. மக்களின் முதல்வர் மாணிக் சர்க்கார் முன்னிலை!
திரிபுராவில் தொடர்ந்து முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்கார் தன்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
Recommended Video

அகர்தலா : நாட்டில் உள்ள முதல்வர்களிலேயே முன்மாதிரி முதல்வரும் ஏழை முதல்வருமான மாணிக் சர்க்கார் மக்களின் விருப்பம் பெற்ற முதல்வராக இருக்கிறார். 1998 முதல் வெற்றிகளைக் கண்டு வரும் மாணிக் சர்க்கார் இந்த முறையும் தன்பூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் திரிபுரா மாநில முதல்வராக அரியணை ஏறி மாணிக் சர்க்கார் அதன் பிறகு ஆட்சியில் இருந்து இறங்கவே இல்லை. எளிமை, அரசியல் பொதுவாழ்வில் நேர்மையை கடைபிடிக்கும் இவர் மக்களின் விருப்பமான முதல்வராக இருந்து வருகிறார்.

2018 வரை தொடர்ந்து தேர்தலில் வென்று வரும் இவருக்கு சொந்த நிலமோ, வீடோ, காரோ இல்லை. 59 வயதான சர்க்காருக்கு முதல்வர் என்ற முறையில் மாத ஊதியம் ரூ. 9,200ம், அலவன்சாக ரூ. 1,200 கிடைக்கிறது. அதை அப்படியே கட்சிக்கு தந்துவிடுகிறார். இவரது மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார். இவரது வருமானத்தில் தான் முதலமைச்சரின் குடும்பமே ஓடுகிறது.
வேலைக்குச் செல்ல பஞ்சலி அரசு காரைக் கூட பயன்படுத்துவதில்லை. ரிக்ஷாவில் தான் போய் வருகிறார். மாணிக் சர்க்கார் மட்டுமே அரசின் காரை பயன்படுத்துவாராம். குடும்பத்தினர் யாரும் அதன் பக்கமே வருவதில்லை. ஒரே நிகழ்ச்சிக்குப் போனாலும் மனைவியை தனது காரில் ஏற்ற மாட்டார். அவரை ஆட்டோவில் வரச் சொல்லிவிடுவாராம் அரசு சொத்தை மிஸ்யூஸ் செய்யக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் சர்க்கார்.
மாணிக் சர்க்காரின் அரசியல் ஆசான் முன்னாள் திரிபுரா முதல்வரான நிரூபன் சக்கரபர்த்தி. நிரூபனும் மிக மிக எளிமைக்குப் பேர் போனவர் தான். முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின் ஒரே ஒரு டிரங்க் பெட்டியோடு முதல்வர் இல்லத்தை காலி செய்து கொண்டு கிளம்பியவர் நிரூபன். அவரிடம் அந்தப் பெட்டியில் இருந்த புத்தகங்கள், உடைகள் தவிர வேறு எந்த சொத்தும் இருக்கவில்லை.
அவரது வழியில் வந்தவரான மாணிக் சர்க்காரும் ஆசானின் வழியிலேயே நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். நீண்ட காலமாக முதல்வராக இருந்து வரும் இந்திய மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் மாணிக் சர்க்கார். இந்த முறை தன்பூர் தொகுதியில் போட்டியிடும் இவர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார். பாஜகவின் திரிபுரா மாநிலத்தலைவர் பிப்லப் தேவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications