Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருடம் ரூ.1.50 கோடி.. திருமலை திருப்பதி கோவிலின் ஜீயருக்கு சம்பள உயர்வு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜீயருக்கு மாத சம்பளம் ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருமலை திருப்பதி கோவிலின் ஜீயருக்கு சம்பள உயர்வு- வீடியோ

    திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜீயருக்கு மாத சம்பளம் ரூபாய் 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    உலகில் மிகவும் அதிக சொத்துக்கள் கொண்ட கோவிலில் திருப்பதி கோவிலும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இங்கு மொட்டை அடிக்கவும், லட்டு வாங்கவுமே மக்கள் கோடி கோடியாக பணத்தை வாரி அளிக்கிறார்கள்.

    வருடம் தோறும் பிரபலங்கள் தொடங்கி ஏழை மக்கள் வரை கோடிக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஜீயருக்கு மாத சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஜீயர் யார்

    ஜீயர் யார்

    இத்தனை சிறப்புகளை கொண்ட திருப்பதி கோவிலுக்கு ஜீயராக ஸ்ரீ சடகோபன் ராமானுஜ ஜீயர் நியமிக்கப்பட்டார். கடந்த 2004ல் திருப்பதி கோவிலுக்கு ஜீயராக நியமிக்கப்பட்டார். அதேபோல் இவரின் அறிவுறுத்தலின் பேரில் இவரின் சிஷ்யர், சிறிய ஜீயராக ஸ்ரீமன் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டார். இவரும் தமிழகத்தை சேர்ந்தவர்.

    சம்பளம்

    சம்பளம்

    பொதுவாக இங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் மிகவும் அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். இந்த கோவிலில் கடைநிலை ஊழியருக்கு கூட மிகவும் அதிக அளவில் சம்பளம் வழங்குகிறார்கள். இங்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளமே ரூபாய் 30,000 ஆகும். அதேபோல் பணியாளர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படும்.

    என்ன வேலை

    என்ன வேலை

    இங்கு ஜீயருக்கு மிகவும் குறைவான வேலையே இருக்கும். தேவஸ்தானத்தை வழிநடத்துதல், பணிகளை மேற்பார்வையிடுதல், சாமி சடங்குகளை செய்தல் உள்ளிட்ட பணிகள் இருக்கும். ஏற்கனவே ஜீயருக்கு வருடம் ரூ.1.09 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. அதாவது மாதம் ரூபாய் 9 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டது. சிறிய ஜீயருக்கு மாதம் ரூபாய் 6 லட்சம் வழங்கப்பட்டது.

    சம்பளம் உயர்வு

    சம்பளம் உயர்வு

    இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இனி ஜீயருக்கு வருடம் ரூ.1.50 கோடி சம்பளம் வழங்கப்படும். அதாவது மாதம் ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். சிறிய ஜீயருக்கு வருடம் ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்படும். அதவாது மாதம் ரூபாய் 8 லட்சம் வழங்கப்படும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+