300 வருஷமாச்சு.. திருப்பதியில் லட்டு தயாரிக்க ஆரம்பிச்சு!
திருப்பதி: திருப்பதி என்றதுமே மொட்டையும், லட்டும்தான் டக்கென நினைவுக்கு வரும். அப்படி ஒரு அம்சம் இந்த மொட்டைக்கும், லட்டுக்கும் உண்டு.
திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் இந்த லட்டு விநியோகம் ஆரம்பித்து 300 வருடமாகி விட்டதாம்.
1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி திருப்பதி கோவிலில் லட்டுவை அறிமுகம் செய்துள்ளனர். அன்று முதல் லட்டு பிரசாதம் அமலில் இருந்து வருகிறது.

லட்டு தயாரிப்பது எப்படி
லட்டு இல்லாத திருப்பதியை அதன் பக்தர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாவு, சர்க்கரை, நெய், எண்ணெய், ஏலம், உலர்ந்த பழங்களைக் கொண்டு இந்த லட்டுவைத் தயாரிக்கின்றனர்.

லட்டுதான் பிரதானம்
திருப்பதி கோவிலில் விதம் விதமான பிரசாதம் இருந்தாலும் லட்டுதான் பிரதானமாக உள்ளது. அதற்குத்தான் அதிக கிராக்கியும் உள்ளது.

போன வருஷம் 9 கோடி லட்டு விற்பனை
கடந்த வருடம் திருப்பதி கோவிலில் 9 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

குறைந்த விலை ரூ. 25
லட்டுக்கு இங்கு சைசுக்கேற்ப விலையும் உண்டு. 300 கிராம் லட்டு விலை ரூ. 25 ஆகும். சைஸ் மாற மாற விலையும் கூடும்.

ரூ. 20க்கு 2 லட்டு
பக்தர்கள் வசதிக்காக ஒரு லட்டு ரூ. 10 என்றும் தனியாக இரண்டு லட்டு வரை வாங்கிக் கொள்ளவும் இங்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

டோக்கன் வாங்கிட்டீங்களா
லட்டு வாங்க வேண்டுமானால் முதலில் டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த டோக்கனைக் கவுண்டரில் காட்டி லட்டுவை பெற்றுக் கொள்ளலாம்.

லட்டு விற்பனை அள்ளுகிறது
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனை மூலம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறதாம். லட்டுதான் மிகப் பெரிய லாபம் தரும் பிரசாதமும் ஆகும்.

கிட்டத்தட்ட ரூ. 200 கோடி
லட்டு விற்பனை மூலம் ரூ. 190 கோடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது கோவில் நிர்வாகம். அதே அளவுக்கு விற்பனையும் நடைபெற்று வருகிறதாம்.

ஒரே வாரத்தில் 10.8 லட்சம் லட்டு காலி
கடந்த வருடம் பிரம்மோத்சவத்தின்போது ஒரே வாரத்தில் 10.8 லட்சம் விற்றுத் தீர்ந்து விட்டதாம். திருப்பதி கோவில் லட்டு விற்பனையில் இது பெரும் சாதனையாம்.

ஒரு நாளஐக்கு 3 லட்சம் லட்டு
ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்சு வரை தயாரிக்கும் அளவுக்கு பக்காவாக உள்ளது லட்டு தயாரிப்புக் கூடம். பிரம்மோத்சவத்தின்போதுதான் மிகப் பெரிய அளவில் லட்டு விற்பனையாகுமாம்.

லட்டு தயாரிக்க 620 பேர்
லட்டு தயாரிக்கும் பணியில் 270 சமையல் கலைஞர்கள் உள்பட 620 பேர் பணியாற்றுகின்றனர். லட்டு தவிர பிற பிரசாதங்களையும் இவர்கள் தயாரிக்கிறார்கள்.

எஸ்கலேட்டரில் வரும் லட்டு
போன வருடம்தான் லட்டு தயாரிக்கும் கூடத்திலிருந்து விற்பனை மையத்திற்கு லட்டு பூந்தியை அனுப்ப 2 எஸ்கலேட்டர் பெல்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications