Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடு! அவருக்கு இதுதான் வேலை.. லட்டு சர்ச்சை.. பிரதமருக்கு ஜெகன் கடிதம்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மட்டும் கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு சொன்னது பகீர் கிளப்பியிருந்த நிலையில், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக இதைச் செய்வதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி லட்டுக்குப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வக முடிவுகள் காட்டுவதாக சந்திரபாபு நாயுடு கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

jagan mohan reddy tirupati laddu andhra pradesh

ஜெகன் மோகன் ரெட்டி: மேலும், இதற்கு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசே காரணம் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி இது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் திருப்பதி கோயில் லட்டில் கலப்படம் செய்ததாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் பொறுப்பற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகள் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மோசமான விளைவுகள்: ஜெகன் மோகன் ரெட்டி தனது கடிதத்தில் மேலும் கூறுகையில், "இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏழுமலையானுக்குப் பல கோடி பக்தர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையைக் கவனமாகக் கையாளவில்லை என்றால், இந்த பொய்கள் பக்தர்களை வேதனையில் தள்ளும். யோசிக்கவே முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.

பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உண்மையில் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட பொய். இந்த பொய்ப் பிரச்சாரம் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

ஆந்திர அரசுக்கு அதிகாரம் இல்லை: திருப்பதி தேவஸ்தான வாரியம் என்பது சுயமாக இயங்கும் அமைப்பு. அதில் பல்வேறு பின்னணியில் இருந்த பக்தர்கள் தான் உள்ளனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற மாநில முதலமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிலரும் உறுப்பினர்களாக உள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது உறுப்பினராக உள்ள சிலர் பாஜக பின்னணியைக் கொண்டவர்கள். திருப்பதி கோயிலில் நடக்கும் விஷயங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் இந்த அறங்காவலர் குழுவிற்குத் தான் இருக்கிறது. இதில் ஆந்திரப் பிரதேச அரசுக்கு பெரியளவில் பங்கு இல்லை.

கோவிலுக்குள் வரும் நெய்யின் தரத்தைப் பரிசோதிக்க பல்வேறு கடுமையான சோதனைகள் உள்ளன. வெளிப்படையான இ-டெண்டர், என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வக சோதனைகள் எனப் பல கட்ட சோதனைகள் உள்ளன. முன்பு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த போதும் இதே போன்ற நடவடிக்கைகளைத் தான் எடுத்தார்கள்.

தரமற்ற பொருட்கள்: மேலும் கோயிலுக்கு வரும் ஒவ்வொரு டேங்கரில் இருந்தும் மூன்று மாதிரிகள் பெறப்பட்டு அவை சோதனை செய்யப்படும். மூன்றும் சேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த நெய் பயன்படுத்த அனுமதிக்கப்படும். ஒன்று தரமற்றதாக இருப்பது தெரிய வந்தாலும் மொத்த டேங்கரும் நிராகரிக்கப்படும். எனவே, பிரசாதம் தயாரிப்பதில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. பல காலமாக இந்த நடைமுறை தான் இருக்கிறது.

இதுபோன்ற ஒரு பிரச்சினை வரும் போது ஒரு பொறுப்புள்ள முதலமைச்சர் பக்தர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், சந்திரபாபு நாயுடு செயல்பட்ட விதம் முற்றிலும் சமூகப் பொறுப்பு இல்லாத வகையில் இருந்தது.

பொருந்தாது: இந்த ரிப்போர்ட்டிலேயே சில முக்கிய விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். தூய்மையான தாவர எண்ணெய், பருத்தி அல்லது பாமாயில், ஆற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பசுக்களிடமிருந்து பெறப்படும் பாலில் இருந்து நெய் தயாரிக்கப்பட்டு இருந்தால் இந்த ஆய்வக சோதனை முடிவுகள் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற பசுக்களில் இருந்து பெறப்பட்ட பாலில் நெய்யைச் செய்திருந்தால் இந்த ரிப்போர்ட்டை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியாது.

சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்புகிறார். அந்த டேங்கர் நிராகரிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இதை எழுப்பியுள்ளார். அதுவும் செப்டம்பர் 18இல் நடந்த அரசியல் கூட்டத்தில் இதைப் பேசியிருக்கிறார். இடைப்பட்ட இரண்டு மாதங்கள் அவர் ஏன் இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மவுனம் காத்தது ஏன்.

பொய் சொல்வது தான் அவருக்கு வேலை: சந்திரபாபு நாயுடு பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் அரசியல் ஆதாயத்திற்காக எந்த நிலைக்கும் செல்வார். அவரது இந்த செயல்கள் முதலமைச்சரின் அந்தஸ்தை மட்டுமல்ல, பொது வாழ்வில் உள்ள அனைவரின் அந்தஸ்தையும் குறைத்துவிட்டன. உலகப் புகழ் பெற்ற திருப்பதியின் புனிதத்தன்மையையும் குறைக்கின்றன.

இந்த முக்கியமான தருணத்தில் ஒட்டுமொத்த நாடும் உங்களைப் பார்க்கிறது. பொய்களைப் பரப்பும் வெட்கமற்ற செயலுக்காக சந்திரபாபு நாயுடுவை கண்டிக்க வேண்டும். மேலும், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்களைப் போக்கவும் திருப்பதியின் புனிதத்தன்மையையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+