2 இளைஞர்களை சுட்டுக் கொலை செய்த திரிணாமுல் பிரமுகர் பபித்ரா ராய் கைது- கட்சியில் இருந்து சஸ்பென்ட்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்டாவில் 2 இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் பபித்ரா ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சஸ்பென்ட் செய்துள்ளது.
மால்டாவின் இங்கிலீஷ்பஜார் பஞ்சாயத்து சமிதியின் தலைவராக இருப்பவர் பபித்ரா ராய். இவர் குலிபாரா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது.

அந்த காரை துரத்திக் கொண்டு அப்பகுதி மக்கள் சென்றனர். இதில் ஆத்திரமடைந்த பபித்ரா ராய், காரில் இருந்தபடியே கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஆசிம் மண்டல், ராஜூ பஸ்வான் ஆகிய 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள் பபித்ரா ராய் காரை தாக்கி சேதப்படுத்தி அவரை கீழே இழுத்துப் போட்டு தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் அவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் பபித்ரா ராயை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பபித்ரா ராயை கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சஸ்பென்ட் செய்துள்ளது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications