மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா - மமதா பானர்ஜிக்கு அடுத்த ஷாக்
மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும் விளையாட்டுத்துறை அமைச்சருமான லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மமதாபானர்ஜியின் அமைச்சரவையில் இருந்து மற்றொரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பீகார் சட்டசபைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பாஜக தற்போது தனது கவனத்தை மேற்கு வங்க மாநிலத்தின் மீது திருப்பி உள்ளது. 'மிஷன் பெங்கால்' என்ற பெயரில் தேர்தல் பணிகளை பாஜக முன்னெடுத்துள்ளது.

அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் அக்கட்சி தலைவர்களுக்கு வலை வீசி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைப்போல பல எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
கடந்த மாதம் மேற்குவங்க மாநிலத்திற்கு அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியுடன், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான லட்சமி ரத்தன் சுக்லா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு தனது ஹவுரா மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில் தனது எம்எல்ஏ பதவியை அவர் இதுவரைக்கும் ராஜினாமா செய்யவில்லை. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் எதிர்முகாமிற்கு தாவி வருவது முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications