காங்கிரஸிலிருந்து திரிணமூல் காங்... ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் கோவா முதல்வர் அறிவிப்பு!
பனாஜி: கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லூய்சின்ஹோ பலேரோவை மாநிலங்களவை இடைத்தேர்தல் வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியாக இருந்த அர்பிதா கோஷ் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ராஜினாமா செய்துவிட்டதால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் நவம்பர் 29ஆம் தேதி ராஜ்யசபா இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக கோவா முன்னாள் முதல்வராக இருந்த லூய்சின்ஹோ பலேரோவை ராஜ்யசபா வேட்பாளராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் லூய்சின்ஹோ பலேரோவை மாநிலங்களவைக்கு அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தேசத்தின் நலனுக்காக அவரது முயற்சிகள் என்னென்றும் மக்களால் பரவலாக பாராட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய லூய்சின்ஹோ கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்ததன் மூலம் மேற்கு கடலோர மாவட்டமான கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் தனது கால் தடத்தை பதிக்க முயற்சிக்கிறது.
கோவா சட்டசபை தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இங்கு பாஜகவுக்கு மாற்றாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது இருப்பை காட்டிக் கொள்ள கருதுகிறது. இதற்காக அக்டோபர் மாதம் கோவாவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கோவாவுக்கு வந்திருந்தார்.
அப்போது மம்தா முன்னிலையில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அது போல் பிரபல நடிகை நசீப் அலியும் அக்கட்சியில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் கோவா தேர்தலில் லியாண்டர் பயஸ் முதல்வர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் கோவா முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கோவா மட்டுமல்லாமல் திரிபுரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களை திரிணமூல் காங்கிரஸ் தன் பக்கம் இழுத்து வருவதாக கூறப்படுகிறது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications