திரிணாமுல் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்தும் முகுல் ராய் நீக்கம்- பா.ஜ.க.வில் இணைகிறார்?
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட மூத்த தலைவர் முகுல்ராய் தற்போது அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோரையும் முகுல்ராய் சந்தித்திருப்பதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையக் கூடும் என கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மமதா பானர்ஜிக்கு அடுத்ததாக நம்பர் 2 நிலையில் இருந்தவர் முகுல்ராய். அண்மையில் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டார் முகுல் ராய்.

இதனைத் தொடர்ந்து முகுல் ராயை கட்சியில் இருந்து ஓரம்கட்டத் தொடங்கினார் மமதா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியில் முகுல் ராய் மட்டுமே இருந்து வந்தார். அந்த பதவிக்கு எம்.பி. சுப்ரதா பாக்சியை நியமித்து முகுல் ராயின் முக்கியத்துவத்தைக் குறைத்தார் மமதா.
அதேபோல் நாடாளுமன்றம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸின் பிரதிநிதியாக முகுல் ராய் மட்டுமே கலந்து கொண்டிருந்தார். இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் திரிணாமுல் கொறாடாக்களான கல்யாண் பானர்ஜியும் ஓ பிரையனும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேறி முகுல்ராய் தனிக்கட்சியைத் தொடங்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மத்திய அமைச்சர்களான அருண் ஜேட்லி மற்றும் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சந்திப்புகளின் அடிப்படையில் திரிணாமுல் காங்கிரஸை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் முகுல் ராய் இணையக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications