தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார், முதல்வர் பற்றி விமர்சனம் செய்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அமளி உருவானது.

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சபை காவலர்களை தாக்கிய தாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான மோகன்ராஜ், பார்த்திபன், சந்திரகுமார், தினகரன், வெங்கடேசன், சேகர் ஆகிய தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இடை நீக்கம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல எனக்கூறி சீராய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications