அரசியல் குழப்பம்: ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் ஆலோசனை
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். ஆளுநர் இன்று சென்னை திரும்ப உள்ள நிலையில் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர்.

இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் தனபால். ஜக்கையன் தவிர எஞ்சிய 18 பேர் பதில் அளிக்காததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது நேற்று ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அடுத்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து ஆலோசித்தார்.
அரசியல் குழப்பமான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறினாலும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தே விவாதித்தார் என்று கூறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications