காவிரிக்காக நாடாளுமன்றத்தில் கை கோர்த்த திமுக-அதிமுக எம்.பி.க்கள்! காந்தி சிலை முன்பு தர்ணா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இந்த தீர்ப்புக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

என்ன செய்ய போகிறார்கள்
எனினும் அனைத்துக் கட்சி தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் துறை அமைச்சரை சந்திக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வழங்க கோரி ஆந்திர எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில் காவிரிக்காக தமிழக எம்பிக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் இன்று தமிழக எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணைந்து போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிரும் புதிருமாக உள்ள அதிமுகவும், திமுகவும், காவிரி விவகாரத்தில் அண்மைகாலமாக இணைந்து வருகின்றனர்.

மத்திய அரசு என்ன செய்ய போகிறது
இவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வாழ்த்துகளை தெரிவித்தார். இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications