ஜல்லிக்கட்டு.. தமிழக அரசின் புதிய சட்டம் செல்லும்... அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி உறுதி
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம் செல்லும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம் செல்லும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்கு நல அமைப்பான கியூப்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

மேலும், 2016ம் ஆண்டின் மத்திய அரசின் அறிவிப்பாணையை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை திரும்ப பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 6 வாரத்தில் பதில் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி செய்தியாளர்களிடம், கலாச்சாரத்தை காப்பதற்காக தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம் செல்லும் என்று கூறினார். மேலும், ஜல்லிக்கட்டுக்காக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் இருந்து புதிய சட்டம் வேறுபட்டுள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications