50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களை களமிறக்கும் பாஜக.. கர்நாடக தேர்தலுக்கான மாஸ் திட்டம் ரெடி!
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களை களமிறக்க இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களை களமிறக்க இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.இந்த முதற்கட்ட பட்டியலில் 72 பேர் இருக்கிறார்கள்.

எப்படி செயல்படுவார்கள்
பொதுவாக பாஜக கட்சிக்கு அமித் ஷா தலைவரான பின் தேர்தல் சமயங்களில் மிகவும் தீவிரமாக செயலாற்றுகிறார்கள். ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் 50,000 பேர் சேர்ந்து வேலை பார்ப்பதுதான் அவர்களின் ஸ்டைல். உத்தர பிரதேச தேர்தல் தொடங்கி திரிபுரா தேர்தல் வரை எல்லாவற்றிலும் அவர்கள் இந்த விதியை பயன்படுத்தினார்கள். இதை கர்நாடக தேர்தலிலும் பயன்படுத்த இருக்கிறார்கள்.

இப்போது 20000 பேர்
இப்போது கர்நாடகாவில் 20,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்கள் தான் முதற்கட்ட தேர்தல் பணிகளை செய்ய இருப்பார்கள். தமிழ், ஹிந்தி, கன்னடம் தெரிந்த பணியாளர்களை இவர்கள் பணிக்கு அமர்த்தி இருக்கிறார்கள். மூன்று மொழி வாக்காளர்களை இது கவர உதவும்.

இன்னும் 30000 பேர்
ஆனால் இந்த வேலை இதோடு முடியவில்லை. இன்னும் 30,000 பேர் வரும் நாட்களில் பணியில் இணைய இருக்கிறார்கள். இவர்கள் 50,000 பேரும் சேர்ந்து பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பார்கள். எல்லோரிடமும் தனித்தனியாக சென்று பேசி இவர்கள், பாஜக பற்றி எடுத்துரைப்பார்கள். இந்த செயலைத்தான் அவர்கள் இதற்கு முன்பு நடந்த மற்ற மாநில தேர்தலிலும் செய்து இருக்கிறார்கள்.

லிங்காயத்து பிரச்சனை
முக்கியமாக இவர்கள் லிங்காயத்துகள் குறித்து மற்ற மக்களிடம் பேச போகிறார்கள். லிங்காயத்து தனி மத அறிவிப்பால், ஹிந்து மதம் எப்படி உடையும், என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதேபோல் இதில் சில மாற்று மத குருமார்களை பேச வைத்து, மாற்று மத மக்களின் வாக்குகளையும் பெற இருக்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications