”நீங்க கெஜ்ரியோட விருந்து சாப்பிடனுமா? ஜஸ்ட் 20 தவுஸண்ட் ரூபிஸ்தான்”
பெங்களூர்: பெங்களூரில் "ஆம் ஆத்மி" கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிடுவதற்கு ஒரு நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் , டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வார இறுதியில் பெங்களூர் வர இருக்கிறார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு கெஜ்ரிவாலின் சுற்றுப்பயணத்தை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.இதன் படி கெஜ்ரிவால் பெங்களூரில் தங்கியிருக்கும்போது பிரபலமான ஓட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் அவருடன் அமர்ந்து சாப்பிட விரும்புவோர் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்றும் இதற்காக ஒரு நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
"இன்போசிஸ்" நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ,சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தவருமான பாலகிருஷ்ணன் இந்த விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications