கர்நாடகத்தில் பரபரப்பு.... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே ராஜினாமா செய்தார் எடியூரப்பா
கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக நீடிப்பாரா என்பது குறித்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரிய வரும்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
கர்நாடகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் 104 இடங்களை பெற்ற பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து உரிமை கோரியது.
அதுபோல் காங்கிரஸ்- ஜேடிஎஸ் 115 எம்எல்ஏக்களுடன் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எனினும் ஆளுநரோ எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

எடியூரப்பாவுக்கு பதவியேற்பு
ஆளுநர் அழைத்ததன் பேரில் எடியூரப்பா வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் கால அவகாசம் கொடுத்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆனால் இன்று மாலை 4 மணிக்குள் சட்டசபையில் கர்நாடக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா அரசு தயாராகி வந்தது.

சட்டங்கள்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில விதிமுறைகளையும் நீதிமன்றம் வெளியிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடத்தக் கூடாது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.

எடியூரப்பா நம்பிக்கை
8 எம்எல்ஏக்கள் இருந்தால் பாஜகவின் ஆட்சி தப்பும் என்ற நிலையில் அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக 100 சதவீத வெற்றி பெறும் என்று எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போதிய எண்ணிக்கை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே, முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications