7 கண்டங்களிலும் மலை ஏறிய சாதனையாளர் மல்லி மஸ்தான் பாபு ஆண்டிஸ் மலைத் தொடரில் மரணம்!
டெல்லி: 7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகளில் மலையேறி சாதனை படைத்தவரான இந்தியாவின் மல்லி மஸ்தான் பாபு என்ற மலையேற்ற வீரர் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடரில் உயிரிழந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த மல்லி மஸ்தான் பாபு உலகப் புகழ் பெற்ற மலையேற்ற வீரர்களில் ஒருவர். இவரது வேலையே மலையேற்றம்தான். ஏதாவது ஒரு மலையில் ஏறியபடி இருப்பது இவரது பொழுதுபோக்காகும்.

உலகின் 7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகள் அனைத்திலும் ஏறி சாதனை படைத்தவர். இதற்காக அவரை 7 சம்மிட்டீர் என்று செல்லமாக அழைப்பார்கள். அதையும் குறுகிய காலத்தில் 7 கண்ட முக்கிய மலைகளில் ஏறிய சாதனையும் இவருக்கே உள்ளது.
இந்த நிலையில் தென் அமெரிக்காவின் முக்கியமான மலைத் தொடரான ஆண்டிஸ் மலைத் தொடரில் ஏறுவதற்காக சென்றிருந்தார் பாபு. அர்ஜென்டினா - சிலி இடையிலான மலைப் பகுதியில் அவர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மார்ச் 24ம் தேதி முதல் அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து அவரைத் தேடும் பணியில் அர்ஜென்டினா, சிலியிலிருந்து ஹெலிகாப்டர்கள் விரைந்து வந்தன. தீவிர தேடுதல் பணியின் இறுதியில் தற்போது பிணமான நிலையில் பாபுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பாபுவின் சகோதரியான டாக்டர் மல்லி தொரசனம்மா கூறுகையில், நண்பர்களுடன்தான் பாபு மலையேறப் போயிருந்தார். வழியில் அவர் தவறி விட்டார். 24ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. இதையடுத்து தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அப்பகுதியில் கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்புப் பணி கடும் பாதிப்பை சந்தித்தது. தற்போது அவரது உடலைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அங்கு கன மழை பெய்து வருவதால் உடலை மீட்க முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாக உள்ளது என்றார்.
கடந்த 2006ம் ஆண்டு 172 நாட்களில் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகளில் ஏறி சாதனை படைத்த பாபு தற்போது உலகின் புகழ் பெற்ற மலை ஒன்றில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பாபு, ஐஐடி காரக்பூரில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications