காஷ்மீரில் கைகெறி வெடிகுண்டுடன் சிக்கிய லஷ்கர்-இ-தொய்பா தளபதி- தொடரும் தேடுதல் வேட்டை!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதியான பாகிஸ்தானைச் சேர்ந்த அபு உகாஷாவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பானது தெற்காசியாவின் மிகப்பெரிய தீ தீவிரவாத அமைப்பாகும். ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதே இதன் நோக்க்கம். இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளால் இவ்வமைப்பு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Top Lashkar-e-Taiba militant arrested in Kashmir's Kupwara district

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் லோலாப் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அபு உகஷா நேற்று கைது செய்யப்பட்டார். நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் சோனம் மார்கெட் பகுதியில் சென்றுகொண்டிருந்த அவர் பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள அபு உகஷாவிற்கு, ஹன்சுலா என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அபு உகஷா பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரிடம் இருந்து ஒரு கைஎறி வெடிகுண்டு மற்றும் ரூ. 38,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அபு உகஷா கைது செய்யப்பட்டவுடன், லோலாப் வனப்பகுதியில் அவரது கூட்டாளிகளை பிடிக்கும் வகையில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+