காஷ்மீரில் குதிரை சவாரி செய்த சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்! 27 பேர் பலி, பலர் காயம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே இன்று பிற்பகல் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 27 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தாகவும், மேலும், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது
கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்று வருகிறார்கள். இப்போது கோடைக் காலம் இருக்கும் சூழலில், பலரும் காஷ்மீர் போன்ற குளிர்ச்சியான பகுதிகளுக்குச் செல்லவே விரும்புகிறார்கள்.

அதேநேரம் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அதாவது காஷ்மீரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படியொரு மோசமான தாக்குதல் தான் இப்போது காஷ்மீரில் மீண்டும் நடந்துள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலைக்கு டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துவிட்டதாவும். மேலும், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.. உ
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரு சிலருக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உறுதியாக தெரியவரும்
என்ன நடந்தது
மலையேற்றத்திற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கின் மேலே உள்ள புல்வெளிகளில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளன. அந்தப் பகுதிக்கு நடந்து அல்லது குதிரை மீது மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது தாக்குதல்
மறைந்திருந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் வரும் வரை காத்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்தத் தாக்குதல் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நடந்ததாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பஹல்காமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியைச் சுற்றிப் பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
பைசரன் புல்வெளிகளில் குதிரைச் சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு முதல் மூன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது மிக அருகில் இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு போலீசார், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி- அமித் ஷா
இந்தத் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டறிந்தார். அதேபோல அமித் ஷாவும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்தியது யார்
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் காஷ்மீர் பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications