கலாபவன் மணி கொலை செய்யப்பட்டாரா?.. உடம்பில் பூச்சி மருந்து கலந்தது கண்டுபிடிப்பு!
கொச்சி: நடிகர் கலாபவன் மணியின் மரண வழக்கில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எத்தனால், மெத்தனால் ஆகிய நச்சுக்களும் கலந்திருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் கலாபவன் மரணத்திற்கு முன்பும், மரணம் சம்பவித்த சமயத்திலும் அவருடன் இருந்த 3 உதவியாளர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அவரது உடல் உள்ளுறுப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வின்போது இதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். குளோரோபைரிபாஸ் என்ற வேதிப் பொருள் கலாபவன் மணியின் குடலில் இருந்துளளது. இது பூச்சி மருந்தாகும். அது போக மெத்தனால் மற்றும் எத்தனாலும் இருந்துள்ளது.
குளோரோபைரிபாஸ் நச்சுப் பொருளாகும். இதை உட்கொண்டால் நரம்பு மண்டலம் ஸ்தம்பித்து மரணம் ஸ்தம்பிக்குமாம்.
முன்னதாக கலாபவன் மணி கல்லீரல் பிரச்சினையால் இறந்திருப்பது போலத் தோன்றுவதாக கேரளா போலீஸார் கூறியிருந்தனர். அத்தோடு மது அருந்தியதால் அவர் இறந்திருக்கலாம் என்று போலீஸார் கூறியிருந்தனர்.
ஆனால் தனது சகோதரர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் உறுதியாக கூறி வந்தார். மேலும் மணியுடன் இருந்த அவரது உதவியாளர்கள் மூவர் மீதும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மணியுடன் இருந்த 3 முக்கிய உதவியாளர்களான முருகன், விபின், ஸ்ரன் ஆகிய மூவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications