பேஸ்புக் மூலமாக சட்டவிரோதமாக கரடி, குரங்குகளை விற்கும் கும்பல்.. திடுக் தகவல்
டெல்லி: பேஸ்புக் மூலமாக அரிய வகை, கரடிகள், குரங்குகளை விற்று வருவது அதிகரித்து வருவதாக மலேசியாவைச் சேர்ந்த டிராபிக் என்ற அமைப்பு கூறியுள்ளது.
உலக வன விலங்குகள் தினமான இன்று இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் டிராபிக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் திட்ட மேலாளர் கணிதா கிருஷ்ணசாமி கூறுகையில்,

பேஸ்புக் மூலம் விற்பனை...
சமூக வலைதளங்கள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன. எல்லாமே இதில் தான் நடக்கிறது. அந்த அடிப்படையல் இப்போது அரிய வகை விலங்குகளையும் இதன் மூலமாக விற்கும் செயல் அதிகரித்து வருகிரது.

மலேசியாவில் அதிகம்...
குறிப்பாக மலேசியாவில் இந்த செயல் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மலேசியாவைச் சேர்ந்த 14 பேஸ்புக் குரூப்களைக் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.

அரியவகை விலங்குகள்...
இந்த குரூப்கள் மூலமாக 300க்கும் மேற்பட்ட அரியவகை விலங்குகள் விற்கப்பட்டுள்ளன. சூரியக் கரடி, ஜிப்பான் வகை குரங்குகள், ஓட்டர்கள், பின்டுராங், கரடி பூனை உள்ளிட்டவை இதில் அடக்கம்.

வேட்டையாட தடை...
80 வகை விலங்கினங்களை ஆராய்ந்ததில் அதில் 60 சதவீதம் மலேசியாவைச் சேர்ந்தவைாகும். இவை வேட்டையாட தடை விதிக்கப்பட்டவை.

ஆமை...
மேலும் 25 சதவீத விலங்குகள் மலேசியாவுக்குச் சம்பந்தமே இல்லாதவை. அதையும் மலேசியாவில் விற்றுள்ளனர். குறிப்பாக மஞ்சள் நிற காக்கடூ காகடுவா (இந்தோனேசியா), மடகாஸ்கரைச் சேர்ந்த ஆமை வகை ஆகியவை இவை.

பேஸ்புக் குரூப்புகள்...
இந்த 14 பேஸ்புக் குரூப்களும் தற்போது மூடப்பட்டு விட்டன. ஆனால் அதில் கிட்டத்தட்ட 68,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர்.

சட்டரீதியாக நடவடிக்கை...
இந்த குரூப்களில் உள்ளவர்களை முடக்க சட்ட ரீதியாகநடவடிக்கை எடுத்து வருகிறோம். மலேசியாவில் இது இப்போது அதிக அளவில் நடைபெறுகிறது' என்கிறார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications