நாளை முதல் 4 மணி நேரம் முன் ரத்து செய்தால் மட்டுமே ரயில் டிக்கெட் கட்டணம் கிடைக்கும்!
டெல்லி: நாளை முதல் ரயிலில் பயணம் செய்வதற்கு 4 மணி நேரம் முன்னதாக ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்ற புதிய முறை அமலாகின்றது.
ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில் முன்பதிவு ரயில் டிக்கெட் ரத்து மற்றும் கட்டணம் திருப்பி அளிப்பதில் வழிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனை நாளை முதல் ரயில்வே துறை அமல்படுத்துகிறது.

ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும் போது 2 ஆம் வகுப்பு இருக்கை வசதி உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டிற்கு ரூபாய் 30 முன்பு பிடித்தம் செய்யப்பட்டது. இனி அது ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டு பிடித்தம் செய்யப்படும். 3 அடுக்கு ஏ.சி பெட்டிகளுக்கான பயணச்சீட்டுக்கு தற்போது ரூபாய் 90 பிடித்தம் செய்யப்படுகிறது. நாளை முதல் இது ரூபாய் 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூபாய் 60ல் இருந்து ரூபாய் 120 ஆகவும், 2 ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு ரூபாய் 100 இல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திருப்பி அளிக்கப்படும். ரயில் புறப்பட்ட பின் டிக்கெட் ரத்து செய்தால் பணம் திரும்ப பெற முடியாது. காத்திருப்போர் பட்டியல், ஆர்.ஏ.சி டிக்கெட்டுகளை பொறுத்தவரை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் பணம் திருப்பி அளிக்கப்படும். அதன் பின்னர் ரத்து செய்தால் கட்டணம் திருப்பி பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications