காதலியை மணப்பதற்காக.. 47 வயதில் அறுவை சிகிச்சை.. பெண்ணாக இருந்தவர் ஆணாக மாறினார்.. இந்தியாவில் தாங்க
போபால்: மத்திய பிரதேசத்தில் பெண்ணாக பிறந்து ஆணாக உணர்ந்த திருநங்கை ஒருவர், தனது காதலியை மணப்பதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து முறைப்படி திருமணம் செய்ய விண்ணப்பித்து இந்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் தனது காதலியை மணப்பதற்காக பெண்ணாக இருந்தவர் ஆணாக மாறிய வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் அல்கா சோனி. இவர் பெண்ணாக பிறந்து நாட்கள் செல்ல செல்ல தன்னை ஆணாக உணர்ந்துள்ளார்.

இதையடுத்து தனது பெயரை அஸ்தித்வா என் மாற்றிக்கொண்டார். அஸ்தித்வாக்கும் அதேபகுதியை சேர்ந்த ஆஸ்தா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, தனது 47-வது பிறந்த நாளில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
மேலும் இந்தூர் மாவட்ட துணை கலெக்டரிடம் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். இதை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. அண்மையில் திருநங்கையர்களுக்கு எதிர்பாலினத்தவர்களுடன் திருமணம் செய்ய உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிகளுக்கு நாளை பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் குறித்து மணப்பெண் ஆஸ்தா கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன். எங்களுக்கு நல்ல புரிதல் இருந்ததால் திருமணம் செய்ய முடிவு செய்தோம். அஸ்தித்வாவை முதன் முதலாக அவரது இல்லத்தில் தான் நான் சந்தித்தேன்.
முதலில் சாதாரணமாக பழகினோம். நாளடைவில் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற உள்ளது" என்றார். திங்கள் கிழமை இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது. திருமணத்திற்காக உற்றார் உறவினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications