ஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நில அதிர்வு! மக்கள் அச்சம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியிருந்தது.
ஜப்பானில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியிருந்தது. இது இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா ஆகிய மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 150 க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வும் ஏற்பட்டது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நிலைமை சீரானதும் வாபஸ் பெறப்பட்டது. இதுவரை ஜப்பானில் நிலநடுக்கத்தில் 62 பேர் பலியாகிவிட்டனர்.
கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மரில் நில அதிர்வுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் கூட நேற்று நள்ளிரவில் இரு முறை நில அதிர்வு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நள்ளிரவு இரு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. முதல் நில அதிர்வு நள்ளிரவு 12.28 மணிக்கு 80 கி.மீ ஆழத்தில் பைசாபாத்திலிருந்து கிழக்கு பகுதியில் 126 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.
இதையடுத்து சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு நில அதிர்வு உணரப்பட்டது. இது 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் தென் கிழக்கே 100 கி.மீ. தூரத்தில் ஏற்பட்டது.
அரை மணி நேரத்தில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முதல் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும் இரண்டாவது நில அதிர்வு 4.8 ஆகவும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் நள்ளிரவு 12.38 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications