Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயில் மலத்தை திணித்து.. ஆபாச வார்த்தைகளால் திட்டி பழங்குடியின பெண் மீது தாக்குதல்! ஒடிசாவில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசாவில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணை தாக்கி, அவரது வாயில் மலத்தை திணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்.

நாடு சுதந்திரம் அடைந்திருந்தாலும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுதந்திரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை அவ்வப்போது நடக்கும் தாக்குதல்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அந்த வகையில் ஒடிசாவில் நடந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

odisha crime

ஒடிசா மாநிலத்தின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த கிராமத்தில் போராட்டம் ஒன்று நடந்திருந்தது. அதாவது, அபய் பக் எனும் வேறு சமூகத்தை சேர்ந்த நபர், பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி சென்றிருக்கிறார். இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தை கண்டித்து இளம்பெண்ணும் அவரது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்காக நவ.19ம் தேதி பழங்குடியின இளம்பெண் மிக மோசமாக பழிவாங்கப்பட்டிருக்கிறார். அன்றைய தினம் இளம்பெண் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அபய் பக் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இளம்பெண்ணின் நெஞ்சை பிடித்து கீழே தள்ளி ஆபாசமான வார்த்தைகளால் சாதிய ரீதியாக திட்டியிருக்கிறார். இந்த சண்டையை தடுக்க வந்த இளம்பெண்ணின் தாயின் கழுத்தை பிடித்து நெரித்த அபய் பக், வயது வித்தியாசம் இல்லாமல் தரக்குறைவாக திட்டியிருக்கிறார்.

பின்னர் மனித மலத்தை எடுத்து இளம்பெண்ணின் முகம் முழுவதும் பூசி, அவரது வாயிலும் திணித்திருக்கிறார். இந்த சம்பவம் கிராமத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றக்கொண்ட போலீசார் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னமும் குற்றம்சாட்டப்பட்ட அபய் பக் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கவுரங் சரன் சாகு கூறுகையில், "அபய் பக், குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளார். எனவே, தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்" என்று கூறியுள்ளார். பழங்குடியின பெண்ணின் வாயில் மலம் திணிக்கப்பட்ட விவகாரம், அச்சமூக மக்களிடையே பெரும் போராட்டத்தை தூண்டியிருக்கிறது.

காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பழங்குடியின அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+