அமித்ஷா ஒரு பப்பு என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டில் மேற்கு வங்க எம்பி.. தொண்டர்களுக்கு வினியோகம்?
கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒரு பப்பு என்ற வாசகத்துடன் உள்ள டிசர்டை திரிணாமூல் காங்கிரஸ் எம்பி ஒருவர் அணிந்துள்ளார். மேலும் வருகிற துர்கா பூஜையின் போது இந்த டிசர்ட்களை கட்சி தொண்டர்களும் அணிவார்கள் என்று கூறியுள்ளார்.
பாஜகவுடன் கடும் மோதல் போக்கை கடை பிடித்து வருபவர் மம்தா பானர்ஜி.
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வரும் மம்தா பான்ர்ஜி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டி-சர்டால் பரபரப்பு
நிதீஷ் குமார், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்களுடன் கைகோர்த்து பாஜகவை வீழ்த்துவோம் என்று நேற்று கூட மம்தா பானர்ஜி கூறியிருந்தார். பாஜகவும் மம்தா பானர்ஜிக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறது. இப்படி எதிரும் புதிருமான அரசியலில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ள நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான டெரிக் ஓ பிரைன் இன்று அணிந்திருந்த ஒரு டி-சார்ட் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

டிரெண்ட் ஆக்கும் திரிணாமூல் காங்கிரஸ்
டெரிக் ஓ பிரைன் அணிநிருந்த டி சர்ட்டில், அமித்ஷாவின் படம் இடம் பெற்றிருந்தது. படத்தை ஒட்டி, இந்தியாவின் 'மிகப்பெரிய பப்பு' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கூட அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்த போது, 'அமித்ஷாவை இந்தியாவின் மிகப்பெரிய பப்பு' என்று விமர்சித்து இருந்தார். தற்போது இந்த விமர்சன வாசகத்தை டி ஷர்ட்டில் அடித்து டிரெண்ட் ஆக்க தொடங்கியிருக்கிறது திரிணாமூல் காங்கிரஸ்.

330 ரூபாய்க்கு டிசர்ட்
இது தொடர்பாக டெரிக் ஓ பிரைன் கூறுகையில், ''கேலி செய்வதுதான் கம்யூனிகேஷனில் மிகப்பெரும் வடிவம். எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிதான் முதலாக இந்த விமர்சனத்தை வைத்தார். அது சோசியல் மீடியாவிலும் டிரெண்ட் ஆனது. தற்போது டி ஷர்ட் வடிவத்திலும் வந்துவிட்டது. ரூ.300 க்கு இந்த டிசர்ட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளம் தொண்டர்கள் அணிந்து பாஜகவுக்கு பதிலடி கொடுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷா மிகப்பெரிய பப்பு
துர்கா பூஜைக்கு முன்பாக சந்தைகளில் இந்த டிசர்ட்கள் இன்னும் சில டிசைன்களுடன் வந்து விடும் என்று தெரிவித்துள்ள டெரிக் ஓ பிரைன், 'இந்த டிசர்ட் அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ''தனது கட்சியின் இளம் உறுப்பினர்கள், இந்த டிசர்ட்களை வடிவமைத்துள்ளனர். அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த டிசைன் பிரம்மிக்க வைக்கிறது'' என்று கூறியிருந்தார். இந்த டிசர்ட் அணிந்தபடி டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானம் மூலமாகவும் டெரிக் ஓ பிரைன் சென்றார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications