அடேங்கப்பா.. வங்கத்தை மொத்தமாக அள்ளும் தீதி.. பாஜக நிலைமை பரிதாபம்தான்.. ETG ரிசர்ச் எக்ஸிட் போல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 164 முதல் 176 வரையிலான இடங்களை பெற்று அமோக வெற்றி பெறும் என்று ETG ரிசர்ச் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
Recommended Video
மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடது சாரி கூட்டணியும் களத்தில் மல்லுக்கட்டுகின்றன.

கருத்து கணிப்பு சொல்வது என்ன?
ஏற்கனவே தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரு சில கருத்து கணிப்புகள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன. வேறு சில கருத்து கணிப்புகள் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவும் என்று தெரிவித்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

மம்தா மீண்டும் ஆதிக்கம்
இந்த நிலையில் ETG ரிசர்ச் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் சொல்லியடித்து வெற்றியை தொடர்ந்து தக்க வைக்கும் என்று கூறுகிறது. . திரிணாமுல் காங்கிரஸ் 164 முதல் 176 வரையிலான இடங்களை பெற்று மம்தா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளது. பாஜக 105 முதல் 115 இடங்களை பெற்று தோல்வியை சந்திக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. ஆனால் பரிதாபமாக காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் 10 முதல் 15 இடங்களை மட்டுமே பெறும் என்று கருத்து கணிப்பு தெளிவாக காட்டுகிறது.

கடந்த தேர்தல் எப்படி?
இதன் மூலம் மம்தா மீண்டும் மேற்கு வங்கத்தை தட்டி தூக்குகிறார் என்று கருத்து கணிப்பு காட்டுகிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 211 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. அந்த வகையில் பார்த்தால் மம்தாவுக்கு இப்போது கிடைக்கும் 176 இடங்கள் மூலம் அவர் 35 இடங்களை பறிகொடுக்கிறார் என்பது தெளிவாகிறது.

பாஜக வாய்ப்பை தவற விட்டது
கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டுமே பாஜகவுக்கு தற்போது 115 இடங்களை பெறும் என்றும் கடந்த தேர்தலை விட 109 இடங்களை அதிகமாக அந்த கட்சி பெறுகிறது. என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இன்று வெளியிடப்பட்ட அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் மம்தா மீண்டும் வெற்றி பெறுவார் என்பதை காட்டுவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications