Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மம்தாவை விமர்சித்தாலோ, கை நீட்டி பேசினாலோ.. விரல்களை உடைப்போம் - திரிணாமுல் அமைச்சர் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மம்தாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசினாலோ, கைநீட்டி பேசினாலோ அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Kolkata Doctor

கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கழுத்து நெறிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கைச் செவ்வாய்க்கிழமை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா பேசுகையில், கொல்கத்தா மருத்துவர் கொலை சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துப் பேசுபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். பின்னர், அவர்களுடைய விரல்கள் உடைக்கப்படும். இல்லையென்றால் இதுபோன்ற நபர்கள் மேற்கு வங்க மாநிலத்தை வங்கதேசமாக மாற்றிவிடுவார்கள்.

அரசு மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவத்தின்போது கூட காவல் துறையினர் யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வங்கதேசத்தில் நடந்தது போன்ற ஒரு நிலைமையை அரசு இங்கே ஒருபோதும் அனுமதிக்கவே அனுமதிக்காது. மேற்குவங்க மாநில மக்களின் உதவியுடன் அந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம் என்றார். அமைச்சர் உதயன் குஹாவின் இந்த வீடியோ சற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உதயன் குஹாவின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் தலிபான் மனநிலையை இந்தப் பேச்சு காட்டுகிறது என்று பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+