நாடாளுமன்றத் தேர்தல்: 100 தொகுதியில் வெல்ல மம்தா இலக்கு
கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் வெல்லவேண்டும் என்று முனைப்போடு களம் இறங்கியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இத
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி அதில் இருந்து வெளியேறினார். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சியினரும் வியூகம் அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தயாராகி வருகிறது.
வங்காளிகளை கவர
மேற்கு வங்காளம் மட்டும் அல்லாது வங்காளிகள் வசிக்கும் அசாம், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
100 தொகுதிகள் இலக்கு
மேற்கு வங்காளத்தில் மட்டும் 42 எம்.பி. தொகுதிகள் உள்ளன. அசாமில் 14 தொகுதிகளும், திரிபுராவில் 2 தொகுதிகளும், ஒடிசாவில் 21 தொகுதிகளும், ஜார்க் கண்ட்டில் 14 தொகுதிகளும் உள்ளன. இந்த மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 100 தொகுதிகளை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் குறி வைத்துள்ளது.
ஒடிஷா, ஜார்க்கண்ட்
இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்திய திரிணா முல் காங்கிரஸ் இந்த முறை ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிசிர் அதிகாரி கூறியுள்ளார்.
ஆட்சியில் முக்கிய பங்கு
இந்த முறை மேற்கு வங்காளத்தையும் தாண்டி வெளி மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாம், திரிபுராவில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இதே போல் ஒடிசா, ஜார்க்கண்டிலும் கவனம் செலுத்த உள்ளோம். அடுத்து மத்தியில் ஆட்சி அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் சிசிர்.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications