திரிபுராவில் 14 வயது சிறுமி பலாத்காரம்: அகில் பாரத் விகாஸ் தலைவர் மனோஜ் கோஷ் கைது
திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

அகர்தலா: திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அகில் பாரத் விகாஷ் இயக்கத்தின் தலைவர் மனோஜ் கோஷ் (வயது 58) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஹோவாய் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்நெந்து சக்கரவர்த்தி கூறியதாவது:
தெலியமுரா என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் 2017-ம் ஆண்டு முதல் தம்மை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தொழிலதிபர் ஒருவர் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அச்சிறுமி மிரட்டப்பட்டிருக்கிறார். தற்போது பண்ணை வீட்டில் இருந்து தப்பி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
இப்புகாரின் அடிப்படையில் 58 வயதான மனோஜ் கோஷ் என்ற தொழிலதிபரை கைது செய்திருக்கிறோம். இவ்வாறு கிருஷ்நெந்து சக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதனிடையே கைது செய்ப்பட்ட மனோஜ் கோஷ் அகில் பாரத் அகண்ட விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் மனோஜ் கோஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி என்கிறது சிபிஎம்.
ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இதனை நிராகரித்திருக்கிறது. தங்களது இயக்கத்துக்கும் மனோஜ் கோஷூக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஸ்வ ஹிந்து பரிஷத் விளக்கம் அளித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications