திரிபுராவில் தொங்கு சட்டசபை.. பாஜகவிற்கு சிக்கலாமே.. நெருங்கி வரும் இடதுசாரிகள்.. டைம்ஸ் நவ் கணிப்பு
- திரிபுராவில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் உள்ளதாக டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது,
அகரத்தலா: திரிபுரா பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க சான்ஸ் குறைவு, அங்கு தொங்கு சட்டசபை உருவாகும் என்று டைம்ஸ் நவ் - ஈடிஜி ரிசர்ச் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும் . 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
2018 வரை திரிபுரா என்பது கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது. அங்கே பாஜக மிகப்பெரிய அளவில் வியூகங்களை வகுத்து வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட் கோட்டையாக திரிபுரா இருந்து வந்தது. கேரளா, திரிபுரா இரண்டு மாநிலங்களில் மட்டுமே கம்யூனிஸ்டுகள் உள்ளன என்ற அளவில் பேசப்பட்டது. மாணிக் சர்க்கார் ஆட்சிக்கும் நல்ல பெயர் இருந்தது. நேர்மையான மனிதர், நாட்டிலேயே ஏழையான முதல்வர் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் அதை எல்லாம் உடைத்து போடும் அளவிற்கு மாணிக் சர்க்கார் ஆட்சி முடிவிற்கு வந்தது.

முடிந்த ஆட்சி
2018ல் மாணிக் சர்க்காரின் 4 முறை ஆட்சிக்கு முடிவு கட்டி அங்கே பாஜக ஆட்சியை பிடித்தது. பிரம்மாண்ட
பிரச்சாரத்திற்கு பின் பாஜக அங்கே ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி திரிபுரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக மீண்டும் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. முக்கியமாக பிரதமர் மோடி நேரடி கலப்பிரச்சாரங்களை மேற்கொண்டார். இந்த நிலையில்தான் திரிபுரா பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க சான்ஸ் குறைவு, அங்கு தொங்கு சட்டசபை உருவாகும் என்று டைம்ஸ் நவ் - ஈடிஜி ரிசர்ச் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.

குழப்பம்
பாஜக 24 இடங்களை வென்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும் என்று நிலையில், பாஜகவிற்கு 24 இடங்களே கிடைக்கும் என்பதால் அங்கு தொங்கு சட்டசபை உருவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறையை விட பாஜக 20 இடங்கள் குறைவாக வேலால் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

கடும் போட்டி
பாஜகவிற்கு கம்யூனிஸ்ட் கடும் போட்டியை கொடுக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி 21 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. டிஎம்பி 14 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கே பாஜக ஆட்சியை அமைப்பதில் சிக்கல் ஏற்படும் ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications