அங்கேயும் நம்ப வைத்து கழுத்தறுத்த பாஜக... கொந்தளிக்கும் திரிபுரா பழங்குடிகள் போர்க்களத்தில்!
தங்களது முதுகில் குத்திய பாஜகவுக்கு எதிராக திரிபுராவில் பழங்குடிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Recommended Video

அகர்தலா: திரிபுராவில் ஆட்சியை கைப்பற்ற உதவியாக இருந்த பழங்குடிகள் கட்சிக்கு கொடுத்த 'தன்னாட்சி' பிரதேச வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பாஜக அறிவித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு அதே முதுகில் குத்திவிட்ட பாஜகவை கண்டித்து திரிபுரா பழங்குடிகள் இப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுராவில் கால் நூற்றாண்டு காலம் இடதுசாரிகள் ஆட்சி இருந்து வந்தது. இம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது.

பாஜகவுக்கு அடிப்படை பலமே இல்லாத நிலையில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் அப்படியே கபளீகரம் செய்தது பாஜக. அத்துடன் திரிபுரா பழங்குடி மக்களின் செல்வாக்குமிக்க ஐடிபிஎப் கட்சியுடன் கூட்டணியும் வைத்தது பாஜக.
இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, திரிபுராவில் பழங்குடிகள் வாழும் 7,000 ச.கி.மீ பரப்பளவை ஒருங்கிணைத்து ஒரு தன்னாட்சிப் பகுதியாக மாற்றுவோம். இதற்கான அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வோம் என பாஜக உறுதி மொழி அளித்தது. இந்த உறுதிமொழியை அளித்தவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
இதனை நம்பி பாஜகவைக்கு திரிபுரா பழங்குடிகள் தங்களது வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொட்டினர். பாஜகவும் துள்ளி குதித்தபடி ஆட்சியில் அமர்ந்தது.
இப்போது திரிபுரா பழங்குடிகள் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என கேட்கின்றனர். ஆனால் பாஜகவோ அப்படியெல்லாம் அரசியல் சாசன திருத்தம் செய்யவே முடியாது என முதுகில் குத்திவிட்டது.
இதனால் கொந்தளித்து போயிருக்கின்றனர் திரிபுரா பழங்குடிகள். பாஜகவின் துரோகத்தைக் கண்டித்து போராட்டத்தை தொடங்கியுள்ள பழங்குடிகள், எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கைக்கான போராட்டம் போல மிகப் பெரும் போராட்டத்தை பாஜக அரசுக்கு எதிராக நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications