மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட டிஆர்எஸ் தலைவர் ஸ்ரீனிவாசராவ் படுகொலை.. சத்திஸ்கரில் சடலம் கண்டெடுப்பு
சுக்மா: தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட, ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான நல்லூரி ஸ்ரீனிவாசராவ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது சடலம் சத்திஸ்கர் மாநிலத்திலுள்ள சுக்மா மாவட்டத்தின் புட்டபாடு கிராமத்தில், இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த தலைவரும், முன்னாள் எம்.பி.டி.சி உறுப்பினர் ஸ்ரீனிவாசராவை மாவோயிஸ்டுகள் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவிற்கு மேல் கடத்தி சென்றுள்ளனர்.
விளை நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிரிடும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஸ்ரீனிவாசராவை கடத்தி சென்றிருப்பார்கள் என்று சந்தேகம் கூறப்பட்டது. ஸ்ரீனிவாசராவ் வசிக்கும் பகுதியில் விளைநிலங்களில் பயிரிடுவது குறித்து, மலைவாழ் மக்களுக்கும் அங்குள்ள தலைவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மலைவாழ் இன மக்களுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலைவாழ் மக்களின் விளைநிலங்களை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, ஸ்ரீனிவாசராவ் பருத்தி மற்றும் நெல் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் விவசாய விவகாரத்தில் சிலருடன் ஸ்ரீனிவாசராவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது பெருந்தகராறில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஸ்ரீனிவாசராவை அவரது வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக கடத்தி சென்றுள்ளனர்.
கடத்தலை தடுக்க முயன்ற ஸ்ரீனிவாசராவின் மனைவி துர்கா மற்றும் மகன் பிரவீனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் ஸ்ரீனிவாசராவிற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும் மாவோயிஸ்டுகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக கடத்தப்பட்ட ஸ்ரீனிவாசராவின் நிலையை என்வென்றே தெரியாத சூழலில், படுகொலை செய்யப்பட்டு சத்திஸ்கர் மாவட்டத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications