இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.. வரலாறு இனி மாறும்.. 1.10 லட்சம் பேர் முன் டிரம்பை பாராட்டிய மோடி
அஹமதாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், வரலாறு இனி மாறும் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.
Recommended Video
இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார். அகமதாபாத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மக்கள் முன்னிலையில் பேசினார்கள்.
டிரம்ப் தனது பேச்சில் இந்தியாவை புகழ்ந்து பேசினார். அதேபோல் பிரதமர் மோடி, தனக்கும், டிரம்பிற்கும் இடையே இருக்கும் உறவு குறித்து பேசினார்.

என்ன பேச்சு
பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் பழமையானது. அதிக வலிமை வாய்ந்தது. பெரும் சிறப்பு வாய்ந்தது. நாம் இப்போது மிகவும் நெருக்கம் ஆகி உள்ளோம். அதிபர் டிரம்ப் அவர் தனது குடும்பத்துடன் இங்கே வந்துள்ளார். குஜராத் மக்கள் அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களுடன் வந்திருக்கும் மெலியானா டிரம்பை வரவேற்கிறோம்.

சுதந்திரமான நாடு
அமெரிக்கா சுதந்திரமான நாடு. இந்தியா அனைவருக்குமான நாடு. நாங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்வோம். இரண்டு நாடுகளும் அந்த கொள்கையில் இருந்து மாறியது கிடையாது. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணையும் புள்ளி அதுதான். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பெரிய குறிக்கோள் இருக்கிறது. அவருக்கு பெரிய கனவு இருக்கிறது. அவர் அமெரிக்காவிற்கு நிறைய செய்துள்ளார்.

என்ன நன்மை
அமெரிக்காவிற்கு டிரம்ப் செய்த நன்மைகளை உலகம் அறியும். அமெரிக்க ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மெலியானா டிரம்ப் பணியாற்றி வருகிறார். அதிபர் டிரம்பின் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். உங்களை மக்கள் முன்னிலையில் வரவேற்க நாங்கள் பெரிய மகிழ்ச்சி அடைகிறோம்.

சபர்மதி நதிக்கரை
நீங்கள் சபர்மதி நதிக்கரையில் இருக்கிறீர்கள். இந்தியாவின் சுதந்திரத்தில் இந்த இடம் அதிக முக்கியத்துவம் வகித்தது. இந்தியாவின் வரலாற்றை இந்த இடம் ஏற்கனவே மாற்றி இருக்கிறது. நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். உலகில் சகிப்புத்தன்மை அதிகம் கூட நாட்டில் இருக்கிறீர்கள். உங்களை இங்கே உபசரிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications