ராகுல் காந்தியின் 'எம்.ஃபில்.' பட்டமும், உண்மையும்!
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எம்.ஃபில். படிப்பு படித்தது குறித்த விவரத்தை அவர் அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது படிப்பு தகுதி குறித்த விவரங்களை சமர்பித்தார். அதில் அவர் டெவலப்மென்டல் எகனாமிக்ஸில்(Developmental Economics) கடந்த 1995ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் பல்கலைக்கழகம் அளித்த சான்றிதழில் உள்ள தேதியும், பாடமும் ராகுல் குறிப்பிட்டதில் இருந்து மாறுபட்டுள்ளது. அவர் தான் படித்த பாடம் மற்றும் பட்டம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டுள்ளார்.

ஃபெயில்
ராகுல் காந்தி நேஷனல் எகனாமிக் பிளானிங் மற்றும் பாலிசி(தேசிய பொருளாதார திட்டம் மற்றும் கொள்கை) பாடத்தில் 58 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் தேர்ச்சி பெற குறைந்தது 60 சதவீதம் தேவை என்று சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்றிதழ்
ராகுலிடம் உள்ள சான்றிதழ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழை டயானா காசிமி, டெவலப்மென்ட் ஸ்டடிஸ்(டெலவப்மென்டல் எகனாமிக்ஸ் அல்ல) துறையின் செயலாளர் வழங்கியுள்ளார். வருங்கால பிரதமர் என்று கூறப்படும் ஒருவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

ராவூல் வின்சி
இங்கிலாந்தில் உள்ள கல்வி மையங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவிஐப்பிகள் படிப்பதால் அவர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் புணை பெயர் வழங்குகிறார்கள். அதன்படி ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட பெயர் தான் ராவூல் வின்சி. இந்த ராவூல் வின்சி என்ற புணை பெயர் கடந்த 2004ம் ஆண்டு தேர்தலின்போது டெலிகிராப் மற்றும் தி இந்து நாளிதழ் மூலம் வெளியே வந்தது.

ஆண்டு
ராகுல் தனது வேட்புமனு தாக்கலின்போது கூறியபடி 1994-95ல் எம்.பில். பட்டம் பெறவில்லை. மாறாக அவர் 2004-05ம் ஆண்டில் தான் பட்டம் பெற்றதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா
ராகுல் காந்தி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றதாக தெரிவித்தது உண்மை தான். மேலும் அவர் டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் சேர்ந்து சிறிது காலம் படித்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications