ஓடும் ரயில் பெண்ணிற்கு ஆபாச படம் காட்டிய டிக்கெட் பரிசோதகர்: தர்ம அடி கொடுத்த மக்கள்
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிற்கு ஆபாச படம் காட்டி செக்ஸ் சில்மிசத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
முகத்தை மூடி மண்டியிட்டாலும் விடாமல் அடித்து துவைத்தனர் மக்கள் கறுப்பு கோட் அணிந்திருந்த அந்த டிக்கெட் பரிசோதகர் தான் செய்தது தவறுதான் என்று விடாமல் கெஞ்சியும் பெண்கள் விடவில்லை. அடித்து துவைத்ததோடு முகத்தை காட்டு என்று டிவி கேமராவில் காண்பித்தனர்.

ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆபாச வீடியோ காட்டியதோடு அந்த பெண்ணிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் கத்தி கூச்சல் போடவே, ஸ்டேசன் வந்த உடன் டிக்கெட் பரிசோதகரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
ஒடும் ரயிலில் பெண்ணிற்கு டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ஆபாச படம் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications