சிறுமி லட்சிதா பலி எதிரொலி.. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியே 15 வயதுக்குள்பட்டோருக்கு அனுமதி இல்லை
அமராவதி: திருமலை திருப்பதி மலைப்பாதையில் பயணிக்க 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் முடிவு அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள். அது போல் பிரம்மோற்சவம், ஆங்கில புத்தாண்டு போன்ற தினங்களின் போது லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்கிறார்கள்.

இவர் சாலை மார்க்கமாக வந்து தரிசிக்கிறார்கள். அது போல் நடைபாதை வழியாக நடந்தே வந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி, இன்னொன்று ஸ்ரீவாரிமெட்டு ஆகியவை ஆகும்.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இரு நடைபாதைகள் வழியாக திருமலை வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில் பெரும்பாலானோர் அலிபிரியை விட ஸ்ரீவாரிமெட்டு பாதையை தேர்வு செய்கிறார்கள். இதன் பயண தூரம் குறைவாகும். அலிபிரி வழியாக திருமலையை அடைய 3,800 படிக்கட்டுகள் நடக்க வேண்டும்.
அப்போதுதான் 7 மலைகளை தாண்டி 9 கி.மீ. தூரம் பயணித்து திருமலையை அடைய முடியும். இதன் பயண நேரம் 4 மணி நேரமாகும். அதே ஸ்ரீவெங்கடாஜலபதியே ஸ்ரீவாரிமெட்டு வழியாக நடந்து திருப்பதி சென்றார் என ஐதீகம் சொல்கிறது. அதில் 2000 படிக்கட்டுகளும் 3 கி.மீ. தூரமும் இருக்கிறது. இந்த நிலையில் இரு மலைபாதைகளிலும் விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை காலங்களில் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் காட்டு விலங்குகள் இந்த மலை பாதைக்கு வருவதாக தேவஸ்தானம் எச்சரிக்கை விடுக்கிறது. இந்த நிலையில் திருப்பதி வனப்பகுதியில் சிறுமியின் சடலம் கிடைத்துள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் பெற்றோர்களுடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி கரடி தாக்கி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூரிலிருந்து திருப்பதிக்கு வந்தவர் லட்சிதா. இவர் பெற்றோர்களுடன் இரவு திருப்பதி மலைக்கு அலிபிரி வழியாக பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போயுள்ளார். அவரை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் வனத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அலிபரி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

உடல் இருந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருப்பதி நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 15 வயதுக்குள்பட்ட சிறுவர்களை மலைபாதை வழியில் அனுமதிப்பதில்லை என தேவஸ்தானம் முடிவு செய்து அறிவித்துள்ளது. திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதியில்லை. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications