வைகுண்ட ஏகாதசிக்கு தயாராகும் திருப்பதி: டிச.30முதல் ஜன.2 வரை ஆர்ஜித சேவைகள் ரத்து
திருமலை: ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 30ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், 2ஆம் தேதி துவாதசியும் வருவதையொட்டி, 1ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் விஐபிகள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து 5 மணி முதல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஆர்ஜித சேவைகள் ரத்து
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு, துவாதசி ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் டிசம்பர் 30அம் தேதி முதல் ஜனவரி 2அம் தேதி வரை கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்யவும், வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்தும் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் வெள்ளி கதவில் இருந்து பக்தர்கள் 3 வரிசைகளில் அனுமதிக்கப்பட்டு, எவ்வித சிரமமும் இல்லாமல் சொர்க்க வாசல் வழியாக அதிகம் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சாம்பசிவராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

துவாதசி தரிசனம்
துவாதசி தரிசனத்துக்கு ரூ.300க்கான 10 ஆயிரம் டிக்கெட் 24ஆம் தேதி ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. அதில் முதல் 2 மணி நேரத்தில் 2.70 லட்சம் பேர் டிக்கெட் பெற முயன்றனர். இதனால் சென்னையில் இருந்து இயங்கக் கூடிய சர்வர் மிகவும் தாமதமானது. இதனால் 1300 டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டது. அதன் பின்னர் சர்வரின் வேகம் அதிகரித்ததும் முழுஅளவில் விற்பனை செய்யப்பட்டது.

சர்வர் முடக்கம்
ஒரே நேரத்தில் 1.20 லட்சம் பேர் இணையதளத்தை பயன்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 2.70 லட்சம் பேர் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயன்றதால் சர்வரில் பாதிப்பு ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பல்வேறு அடிப்படை வசதிகள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளது என்றார் சாம்பவசிவராவ்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications