திஹார் சிறைக்குப் போன 3வது தமிழக அரசியல்வாதி தினகரன்
டெல்லி: டெல்லி திஹார் சிறையில் அடைபடும் தமிழகத்தைச் சேர்ந்த 3வது அரசியல்வாதி டிடிவி தினகரன் ஆவார்.
டெல்லியில் அமைந்துள்ள திஹார் சிறை மிகப் பிரபலமானது. பிரமாண்ட சிறை மட்டுமல்லாமல் பல விஐபிகளின் வீடாகவும் இது விளங்கி வருகிறது.
இந்த சிறையில் பல புகழ் பெற்ற குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல பல முக்கிய பிரபலங்களும் கூட திஹார் சிறையில் வாசம் புரிகின்றனர், புரிந்துள்ளனர்.

தமிழக அரசியல்வாதிகள்
தமிழகத்திலிருந்தும் இந்த சிறையில் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் அரசியல்வாதிகள் என்று பார்த்தால் இதற்கு முன்பு இரு முக்கியப் பிரபலங்கள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கனிமொழியும், ஏ. ராசாவும்.

2 ஜி வழக்கில் சிறை
2ஜி வழக்கில் இந்த இருவரையும் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கனிமொழி கிட்டத்தட்ட 6 மாதம் சிறையில் இருந்தார். ராசா 15 மாதம் சிறையில் இருந்தார்.

டிடிவி தினகரன்
இவர்கள் வரிசையில் தற்போது தினகரன் இணைந்துள்ளார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரன் முதல் முறையாக திஹார் சிறைக்கு வந்துள்ளார். திமுகவைத் தொடர்ந்து அதிமுக சிறைக்கு வந்துள்ளது.

விடுதலை கிடைக்குமா?
ராசா, கனிமொழி போல நீண்ட காலம் தினகரனும் சிறையில் இருப்பாரா அல்லது விரைவில் வழக்கிலிருந்து தப்புவாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவ்வளவு சீக்கிரம் தினகரனுக்கு விடுதலை கிடைக்காது என்றே கருதப்படுகிறது. மேலும் இந்த மூவரும் லஞ்சம், ஊழல் வழக்கில் சிக்கி சிறைவாசம் விதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது தமிழக அரசியல்வாதி
தமிழகத்திலிருந்து வேறு எந்த அரசியல்வாதியும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரியவில்லை. அந்த வரிசையில் கனிமொழி, ராசா மற்றும் தினகரன் ஆகியோர் மூலம் தமிழகத்திற்குப் புதிய "பெருமை" கிடைத்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications