சசிகலா பிறந்தநாள்... பெங்களூரு சிறைக்கு போன தினகரன், திவாகரன்
சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரனும், திவாகரனும் இன்று பெங்களூரு சென்றுள்ளனர்.
பெங்களூரு: சசிகலாவின் 63வது பிறந்தநாளான இன்று வாழ்த்து தெரிவிக்கவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கவும் டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றுள்ளார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரனும் இன்று சசிகலாவை சந்தித்து வாழ்த்து கூற பெங்களூரு சென்றுள்ளார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று சசிகலா தனது பிறந்தநாளை மிக எளிமையாகவே கொண்டாடுவார். ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் பிறந்தநாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொல்லி பரிசு கொடுப்பாராம் அவரது உயிர் தோழி ஜெயலலிதா.
ஜெயலலிதா இந்த ஆண்டு உயிரோடு இல்லை என்பது மிகவும் சோகமான விசயம். அதோடு அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் வரும் முதல் பிறந்தநாளை சசிகலா சிறையில் கொண்டாடும்படி நேர்ந்து விட்டது. சசிகலாவிற்கு இது 63வது பிறந்தநாளாகும்.
அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றுள்ளார். அதே நேரத்தில் திவாகரனும் சசிகலாவை சந்திக்க சிறைக்கு சென்றுள்ளார்.
சசிசலா சிறையில் இருந்தாலும் முதன் முறையாக நமது எம்ஜிஆர் நாளிதழில் 9 அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை வாழ்த்தி விளம்பரம் கொடுத்துள்ளனர்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் அளிக்கும் பேட்டியில் அணுகுண்டு வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications