இரட்டை இலை விவகாரம்: டிடிவி தினகரனுக்கு வரும் ஜூன் 12ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான டிடிவி தினகரனின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கைதான டிடிவி தினகரனின் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தினகரனின் காவலை ஜூன் 12 வரை நீட்டித்து டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா சார்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, கடந்த 22ம் தேதியன்று மாவட்ட நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கடந்த 26ஆம் தேதி விசாரணை
அப்போது தினகரனின் வக்கீல் வரவில்லை என்பதால், வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, தினகரனின் ஜாமீன் மனு, டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இன்றைக்கு ஒத்திவைப்பு
விசாரணை அதிகாரி சஞ்சய் செராவத் ஆஜராகததால் விசாரணையை தள்ளி வைக்குமாறு போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பூனம் சவுத்ரி விசாரணையை வரும் இன்றைக்கு ஒத்திவைத்தார்.

தினகரன் ஒத்துழைக்கவில்லை
இந்நிலையில் தினகரனின் ஜாமீன் மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய தினகரன் ஒத்துழைக்க வில்லை என டெல்லி போலீசார் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனுறத்தாக்கல் செய்துள்ளார்.

காவல் நீட்டிப்பு
இதனை விசாரித்த நீதிமன்றம் தினகரனுக்கு வரும் ஜூன் 12 ம் தேதி வரை சிறை காவலை நீட்டித்து நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தினகரனுடன் கைதான அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் இடைத்தரகர் சுகேஷ் ஆகியோரின் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் நீட்டிப்பால் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications