அதிமுகவில் நீடிக்கிறேன்.. நான்தான் து.பொ... "வெளியே" வந்த டிடிவி தினகரன் அதிரடி!
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் தான் நீடிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கட்சியில் இருந்து தம்மை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு என்று ஜாமினில் வெளிவந்துள்ள டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு சுமார் ரூ.60 கோடி பேரம் பேசியதாக அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ள டிடிவி தினகரன் இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

டெல்லி விமான நிலையத்தில் மனைவி, மகளுடன் புறப்பட்ட தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சியில் தான் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்தார். கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது என்றும் தினகரன் கூறியுள்ளார்.
/news/india/ttv-dinakaran-says-that-he-is-still-party-284752.html

Click it and Unblock the Notifications
