ரூபா பேட்டிக் கொடுப்பதை தடுத்து நிறுத்துங்கள்.. கர்நாடக முதல்வருக்கு தினகரன் தரப்பு கடிதம்!
சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு: சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை வெளிச்சத்துக் கொண்டு வந்தவர் சிறைத்துறை டிஐஜி ரூபா. சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து தர டிஜிபி சத்தியநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் இரு மாநிலங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்தது ரூபா போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இருப்பினும் சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்பட்ட சலுகைகள் உண்மை தான் என்றும் அவர் தெரிவித்து வந்தார். இதனை சசிகலா தரப்பு தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்நிலையில் சசிகலா விவகாரம் தொடர்பாக ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.
விளம்பரத்திற்காக சசிகலா குறித்து தவறாக தகவலை தமிழ் ஊடகங்களுக்கு முன்னாள் டி.ஐ.ஜி ரூபா அளிக்கிறார் எனவும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications